பெங்களூரு

"சிறந்த உணவுகள் சர்வதேச அளவில் பரவலாக்கப்பட வேண்டும்'

DIN

சிறந்த உணவுகள் சர்வதேச அளவில் பரவலாக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா நாட்டில் சிறந்த சமையலர் விருது பெற்ற பெல்லி மெக்கே கூறினார்.
ஐடிசி நிறுவனத்தின் பேபெல்லா சாக்லெட் அறிமுக நிகழ்ச்சி பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் பங்கேற்று அவர் பேசியது:-
ஆஸ்திரேலியா நாட்டின் புகழ் பெற்ற சாக்லெட்டான பேபெல்லாவை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய ஐடிசி நிறுவனம் முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  சாக்லெட் மட்டுமின்றி,  இந்தியாவின் பாரம்பரியமிக்க உணவுகள்  சர்வதேச அளவிலும்,  சர்வதேச உணவுகள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டும்.
உலக மயமாக்கலுக்குப் பின்னர்,  சர்வதேச அளவில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நிலைமை உருவாகியுள்ளது.  இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு,  அனைத்து நாட்டின் சிறந்த உணவுகளையும் சர்வதேச அளவில் பரவலாக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஐடிசி உணவுப் பொருள்கள் பிரிவின் மூத்த செயல் அதிகாரி ஹேமந்த்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT