சட்டப் பேரவைத் தேர்தல்: பாஜகவில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக கன்னட, தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக கன்னட, தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, பெங்களூருவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சர்வக்ஞ நகர், சிவாஜி நகர், காந்தி நகர், சி.வி.ராமன் நகர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவில் தமிழர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.