முகப்பு
பெங்களூரு

குறைந்த மாணவர்களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை: அமைச்சர் என்.மகேஷ்

குறைந்த மாணவர்களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

குறைந்த மாணவர்களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
குறைந்த மாணவர்களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மூடப்படும்  எண்ணம் அரசுக்கு இல்லை. வேறு பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமும் இல்லை. 
கல்வியில் தரம் குறைந்துள்ளது என்று பெற்றோர்கள் கருதுவதால், அவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வருவதில்லை. எனவே அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 
எல்.கே.ஜி.வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.  இதனால், அரசு பள்ளிகளில் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.