3 வாக்குச் சாவடிகளில் அமைதியான வாக்குப் பதிவு
3 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
3 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெங்களூரில் உள்ள ஹெப்பாள் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி எண்-2 மற்றும் கொப்பள் மாவட்டத்துக்குள்பட்ட குஷ்டகி தொகுதியில் வாக்குச் சாவடி எண்கள் 20, 21-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததால், அந்த வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இத்தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஹெப்பாள் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள 1,444 வாக்காளர்களில் 772 பேர் வாக்களித்துள்ளனர். இது 53.46 சதவீதமாகும்.