பெங்களூரு

பெங்களூரில் அக்.15 முதல் புத்தகத் திருவிழா

DIN

பெங்களூரில் அக்.15-ஆம் தேதி முதல் பெங்களூரு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. கன்னடம், ஆங்கிலம் நூல்களுடன் தமிழ்மொழி நூல்களும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சி இயக்குநர் பி.எஸ்.ரகுராம், செய்தியாளர்களிடம் கூறியது: 2015-ஆம் ஆண்டில் கடைசியாக பெங்களூரில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. சட்டச்சிக்கல்கள் இருந்ததால் புத்தகத் திருவிழா தடைபட்டிருந்தது. தற்போது அனைத்து சட்டச் சிக்கல்களும் நீக்கப்பட்டுள்ளன. 
எனவே, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அக்.15 முதல் 21-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு பெங்களூரு புத்தகத் திருவிழா நடக்கிறது. புத்தகத் திருவிழாவில் புத்தகக் கண்காட்சி, கன்னட இலக்கிய நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள் நடக்கவிருக்கின்றன.
புத்தகக் கண்காட்சியில் 350-க்கும் அதிகமாக அங்காடிகள் அமைக்கப்பட்டிருக்கும். கன்னடமொழி தவிர தமிழ், தெலுங்கு, தெலுங்கு, மலையாளம், வங்காளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளின் நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும். 100 அங்காடிகள் கன்னட நூல்களுக்கும், 30 அங்காடிகள் தமிழ் நூல்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இத்திருவிழாவுக்கு பெங்களூரு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகங்களின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, கர்நாடக அரசின் கன்னட வளர்ச்சி ஆணையம், கன்னட புத்தக ஆணையம், குவெம்பு இந்திய மொழிகள் பரிமாற்ற ஆணையம், கன்னட இலக்கியப் பேரவை, மத்திய இலக்கிய அகாதெமி, கர்நாடக இலக்கிய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. 
வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் நூல்வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே கண்காட்சியின் முழக்கமாக, "அறிவுத் தூண்டுதல் தேவையா, குழந்தைகளுடன் வாருங்கள்' என்ற வாசகத்தை பொறித்துள்ளோம். 
3 நாள்களுக்கு கன்னட இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கவிருகிறது. புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்து பதிப்பகங்களும் வாசகர்களுக்கு நூல்கள் மீது கட்டாயமாக 15 சதவீதம் தள்ளுபடி வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கன்னட புத்தக ஆணையம் தனது நூல்கள் மீது 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. எனவே, அனைத்து புத்தகங்கள் மீதும் 15 முதல் 50 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. 
குவெம்பு இந்திய மொழிகள் பரிமாற்ற ஆணையத்தின் நூல்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சியில் அங்காடிகளை அமைக்க கட்டணத்தில் கன்னடப் பதிப்பகங்களுக்கு 60 சதம், ஆங்கிலப்பதிப்பகங்களுக்கு 30 சதம், இதரமொழி பதிப்பகங்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. 
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து பதிப்பகங்களும் அங்காடிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 2015-ஆம் ஆண்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.10 கோடிக்கு நூல்கள் விற்பனையானது. தற்போது நடக்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் அதைவிட அதிகமாக நூல்கள் விற்பனையாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT