பெங்களூரு

கர்நாடகத்தில் கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுகிறது: மஜத மாநிலத்தலைவர் எச்.விஸ்வநாத்

DIN

கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுவதாக மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக மாநில அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதை பொருள்படுத்தாமல் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
கூட்டணி ஆட்சியில் ரூ. 48 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மாநில கட்சிகள் மாநிலத்தை ஆளுவதால், மாநிலத்தின் வளர்ச்சி மேம்படும் என்று மஜத நீண்ட நாள்களாகக் கூறி வருகிறது. மத்திய அரசு  பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மறுத்த நிலையில், மாநில அரசு தானாக முன்வந்து,  பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் தேசிய கட்சிகளைவிட, மாநிலக் கட்சிகளுக்குத்தான் அதிகம் தெரியும். 
தேசிய வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காமல் உள்ளது. அனைத்து மாவட்டங்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற வளர்ச்சித் திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT