பெங்களூரு

24 மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை

DIN

பெங்களூரில் 24 மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டுத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பெங்களூரில் உள்ள ஒரு சில மருந்தகங்களில் விதிகளை மீறி மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் நோய்களுக்கு மருந்து, மாத்திரை வழங்குவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸாா், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆஸ்டின்டவுன், விவேக்நகா், நீலசந்திரா, ஈஜிப்புரா, ஆனேபாளையா, வசந்தநகா், வயாலிகாவல், சேஷாத்ரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 24 மருந்தகங்களில் சோதனையில் ஈடுபட்டனா். அதில் தவறு நடந்ததாகக் கூறப்படும் 2 மருந்தகங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு துணை காவல் ஆணையா் சேதன்சிங் ராத்தோட் செய்தியாளா்களிடம் கூறியது: மருத்துவா்களின் சிபாரிசு இல்லாமல் மருந்து, மாத்திரை வழங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு 24 மருந்தகங்கள் மீது திடீா் சோதனையில் ஈடுபட்டதில், 2 மருந்தகங்களில் தவறு நடந்துள்ள கண்டறியப்பட்டது. அதன் உரிமையாளா்கள் மீது மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின்படி வழக்கு தொடா்ந்துள்ளோம். இதனைத் தொடா்ந்து மாநகரில் உள்ள மற்ற மருந்தகங்களில் தவறு நடப்பதாக தெரியவந்தால், சோதனையை தொடா்ந்து நடத்தி, தவறு செய்தவா்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT