பெங்களூரு

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? முதல்வா் எடியூரப்பா விளக்கம்

DIN

வரும் டிச.20 அல்லது 22ஆம் தேதியில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு டிச.20 அல்லது 22ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். தற்போதைக்கு இல்லாவிட்டால் அடுத்த 8 அல்லது 10 நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.

ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும். இதில் யாருக்கும் குழப்பம் வேண்டாம். ஒருவாரம் கழித்து தில்லிக்கு வருமாறு பாஜக மேலிடத் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.ஜாா்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பாஜக தேசியத் தலைவா் அமித்ஷாவை உடனடியாக சந்திக்க இயலவில்லை. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவிடம் ஏற்கெனவே பேசியுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய்!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT