பெங்களூரு

விமானத்தொழில் கண்காட்சியில் நேர்ந்த தீ விபத்துக்கான காரணம் என்ன?: போலீஸ் விசாரணை

DIN


 விமானத் தொழில் கண்காட்சியில் நேர்ந்த தீ விபத்துக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு, எலஹங்கா, விமானப் படைத் தளத்தில் 4-ஆவது நாளாக சனிக்கிழமை நடந்த விமானத் தொழில் கண்காட்சியின்போது வாகன நிறுத்தத்தில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்களை தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாகன ஓட்டுநர் ஒருவர் வீசிய சிகரெட்டால் நிலத்தில் உலர்ந்திருந்த புல் தீப்பற்ற காரணமாக இருந்ததாகவும், அது கார்களை எரித்து நாசமாக்கியதாகவும் கூறப்படுகிறது. சான்ட்ரோ ஒன்றில் பொருத்தியிருந்த எல்பிஜி எரிவாயு கசிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து எரிபொருள் கசிந்து, அது தரையில் விழுந்து வெயிலின் தாக்கத்தில் தீப் பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்படி பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், உலர்ந்த புற்செடிகள் தான் தீப் பற்றுவதற்கு காரணமாக இருந்தன என்று தெரியவந்துள்ளது. எனினும், இது குறித்த தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் டி.சுனில்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: தீயில் எரிந்து நாசமான வாகனங்களை பதிவு செய்வதற்காக விமானப் படைத் தளத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கார்களின் உரிமையாளர்களுக்கு சட்ட  உதவிகளைசெய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம். தீ விபத்துக்கான காரணத்தை தீயணைப்புப் படையினர் கண்டுபிடிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் விமானத் தொழில் கண்காட்சிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
பின்னர், கார்களின் உரிமையாளர்களை சுனில்குமார் சந்தித்துப் பேசினார். புற்களில் பதுங்கியிருந்த பாம்புகளும் தீயில் கருகியிருந்தது தெரியவந்தது. கருகிய பாம்புகள் ஏரியில் எறியப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT