பெங்களூரு

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதை, உரம் வழங்க ஏற்பாடு: முதல்வர் குமாரசாமி

DIN

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதை, உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை மாநகர ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளுடனான 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியது: மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 
இதனால் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரத்தை எந்த பிரச்னைகளும் இல்லாமல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை ஆதாருடன் இணைக்க ஜாதி மற்றும் வருவாய்ச் சான்றிதழ் கேட்பதால், அதனை பெறுவதற்காக வருவாய்த்துறை சேவை மையங்கள் முன் மக்கள் திரளாக காலை முதல் மாலை வரை காத்துக் கிடப்பதாக புகார்கள் வந்துள்ளன. 
எனவே, சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக வங்கிகளில் விவசாயிகள் வங்கியுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதில் வங்கிகள் ஒத்துழைப்பு வழங்காமல் பிரச்னை செய்து வருகின்றன. 
எனவே, மாவட்ட ஆட்சியர்கள் கடன் தள்ளுபடியால் பயனடையும் பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். வணிக வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்கடனை ஒரே தவணையில் செலுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் பரிவோடு அணுக வேண்டும். ஆட்சியர்கள் கிராம தரிசன நிகழ்ச்சியை மேற்கொண்டால், அங்குள்ள பிரச்னைகளை நேரடையாக கண்டறியமுடியும். மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த ஊரகம் மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை முடிவு செய்துள்ளது. 
இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வறட்சி நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு காலம் கடத்தினாலும், அதனை உடனடியாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT