பெங்களூரு

ஆபரண மாளிகை மோசடி வழக்கு:  7 இயக்குநர்களிடம் விசாரணை

DIN

தனியார் ஆபரண மாளிகை மோசடி வழக்கு தொடர்பாக,  அதன் 7 இயக்குநர்களிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு சிவாஜி நகர் தொகுதியில் உள்ள தனியார் ஆபரண மாளிகை உரிமையாளர்,  முதலீடு செய்தவர்களிடம் பண மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். 
இதுதொடர்பாக சுமார் 27 ஆயிரம் பேர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து,  மோசடியை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையினருக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார். 
இதுதொடர்பாக ஆபரண மாளிகையில் இயக்குநர்கள் நிஜாமுதீன்கான், நசீர்ஹுசேன், நவீத் அகமது, அர்ஷத்கான், அன்சர்பாஷா, வாசீம், தாதாபீர் ஆகிய 7 பேரிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
இந்த நிலையில், தனியார் ஆபரண மாளிகையில் பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, கோலார் உள்ளிட்ட  கர்நாடகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,  தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேந்தவர்களும் முதலீடு செய்துள்ளது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT