பெங்களூரு

பைக் மீது டேங்கர் லாரி மோதல்:  பெண் உள்பட 2 பேர் சாவு

DIN

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில்,  படுகாயமடைந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சிக்மகளூரு பழைய லகாயா கிராமத்தைச் சேர்ந்தவர் லதாமணி (25). இவரது மைத்துனர் மனோஜ் (19).  திங்கள்கிழமை லதாமணி தனது கைக் குழந்தையுடன், மனோஜுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த டேங்கர் லாரி மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த லதாமணி, மனோஜ் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிக்மகளூரு ஊரக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT