பெங்களூரு

காற்றுமாசைத் தூய்மைப்படுத்தும் கருவி பொருத்தம்: பெங்களூரு மாநகராட்சி முடிவு

DIN

பரவலாக காற்றுமாசைத் தூய்மைப்படுத்தும் கருவியைப் பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தில்லியில் காற்றுமாசு அதிகரித்து, மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், பெங்களூரில் அண்மைக்காலமாக காற்றில் ஏற்படும் மாசு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த மாதம் பெங்களூரில் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் சோதனையோட்டமாக காற்று மாசுவை தூய்மைப்படுத்தும் கருவிகள் (ஏர்  ஃப்யூரீபை) பொருத்தப்பட்டன. 
இந்தக் கருவிகள் உள்ள பில்டரை அண்மையில் மாற்றியபோது,  காற்றுமாசு அதிகரித்து வருவது தெரியவந்தது. 
மாநகராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள ஹட்சன் சதுக்கத்தில் பொருத்தப்பட்ட கருவியில் காற்று மாசுவின் அளவு 1 கியூபிக் செ.மீ. இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது. 
இந்த நிலைமை தொடருமானால் தில்லிக்கு ஏற்பட்ட நிலைமை பெங்களூரிலும் ஏற்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அச்சம் கொண்டுள்ளது. 
பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காற்றுமாசுவை குறைக்கும் பணி மிகுந்த சவாலாக உருவெடுத்துள்ளது.  எனவே நிலைமை அதிகரிப்பதற்கு முன்னதாக, காற்றுமாசுவைக் குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 
பெங்களூரில் பரவலாக காற்றுமாசு அதிகமுள்ள இடங்களைக் கண்டறிந்து, காற்றுமாசைத் தூய்மைப்படுத்தும் 500 கருவிகளைப் பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால், காற்றுமாசுவைக் குறைக்க முடியும் என்று மாநகராட்சி நம்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT