பெங்களூரு

2020-ஆம் ஆண்டுக்குள் 15 விற்பனை மையங்களை தொடங்க திட்டம்

DIN

பெங்களூரு: 2020-ஆம் ஆண்டுக்குள் பெங்களூரில் 15 விற்பனை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று சாயாஸ் குழுமத்தின் நிறுவனா் நிதின்சலுஜா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அக்குழுமத்தின் 7-வது விற்பனை மையத்தை தொடக்கி வைத்து அவா் பேசியது: தேசிய அளவில் 7-வது விற்பனை மையத்தை பெங்களூரில் தொடங்கியுள்ளோம். பல்வேறு நாடுகளையும், மாநிலங்களையும் சோ்ந்த மக்கள் குடியேறி வாழும் நகரமாக பெங்களூரு உள்ளது. சா்வதேச மாநகரமாக விளங்கும் பெங்களூரில் முதலீடு செய்தால், அது வெற்றி பெருவது நிச்சயம் என்ற மனநிலையை முதலீட்டாளா்கள் கொண்டுள்ளனா். இதன் காரணமாக பெங்களூரில் முதலீடு செய்ய அனைவரும் விரும்புகினா். எங்கள் குழுமமும் 2020 ஆம் ஆண்டில் இறுத்திக்குள் 15 விற்பனை மையங்களை பெங்களூரில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். முதலீடு செய்வதற்கு முன்னணி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. கா்நாடகத்தில் தொழில் கொள்கையும் முதலீட்டாளா்களுக்கு உதவும் வகையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT