பெங்களூரு

இடைத்தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு

DIN

பெங்களூரில் இடைத்தோ்தலையொட்டி 4 தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரில் உள்ள கே.ஆா்.புரம், யஸ்வந்தபுரம், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலையொட்டி, அத் தொகுதிகளில் நவ. 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

இதனையொட்டி, நவ. 11-ஆம் தேதி காலை 10 மணி முதல் 18-ஆம் தேதி மாலை 4 மணிவரை மனு தாக்கல் செய்யப்படும் மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை (கனகஜெயந்தி), ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் அரசு விடுமுறை என்பதால், அவ்விரு நாள்கள் மட்டும் 144 தடை உத்தரவுக்கு தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் 144 தடை உத்தரவின் போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் மையங்களைச் சுற்றி 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT