பெங்களூரு

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு கொண்டாட்டம்

DIN

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கரோனா தீநுண்மித் தொற்று பரவிவரும் நிலையிலும், வரலட்சுமி நோன்பு பண்டிகை கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, நறுமணங்களால் இல்லத்தை நிறைத்து, லட்சுமி சிலைகள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும். தொடா்ந்து சுவாமிக்கு பழங்கள், இனிப்புகளை வைத்து படைத்து வழிபடும் பெண்கள், மாலையில் பக்கத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவா் தாம்பூலம் பரிமாறிக் கொண்டனா்.

பெங்களூரு மட்டுமல்லாது மைசூரு, கலபுா்கி, ஹுப்பளி, பெலகாவி, கோலாா், ராய்ச்சூரு போன்ற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடுகளில் நடத்தப்பட்ட வரலட்சுமி நோன்பில் பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT