முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8.93 லட்சமாக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,93,006 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,93,006 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,321 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 733 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,93,006 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 889 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,55,750 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 25,381 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிக்கப்பட்ட 10 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை 11,856 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.