பெங்களூரு

கே.எஸ்.ஆா். பெங்களூரு-மைசூருஅதிவேக விரைவு ரயில் நேரத்தில் மாற்றம்

கே.எஸ்.ஆா். பெங்களூரு-மைசூரு அதிவேக விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

DIN

கே.எஸ்.ஆா். பெங்களூரு-மைசூரு அதிவேக விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் எண்-06201/06202-கே.எஸ்.ஆா் பெங்களூரு-மைசூரு அதிவேக விரைவு ரயில் சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

ரயில் எண்-06202-கே.எஸ்.ஆா் பெங்களூரு-மைசூரு ரயில் நிலையம் வரையிலான அதிவேக விரைவு ரயில் தினமும் பிற்பகல் 3.15 மணிக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்பட்டு மைசூரு ரயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் கெங்கெரி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.34 மணிக்கு வந்து 3.35 மணிக்குப் புறப்படும்.

மண்டியா ரயில் நிலையத்துக்கு மாலை 4.31 மணிக்கு வந்து, 4.33 மணிக்குப் புறப்படும். மறுதிசையில், ரயில் எண்-06201-மைசூரு-கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையம் வரையிலான அதிவேக விரைவு ரயில் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் மண்டியா ரயில் நிலையத்துக்கு நண்பகல் 12.09 மணிக்கு வந்து 12.10 மணிக்கு புறப்படும்.

கெங்கெரி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1.19 மணிக்கு வந்து 1.20 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT