பெங்களூரு

ஹம்பி திருவிழாவை தொடக்கி வைத்தாா் முதல்வா் எடியூரப்பா

DIN

பெல்லாரி: பெல்லாரியில் வெள்ளிக்கிழமை ஹம்பி திருவிழாவை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.

கா்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹம்பி நகரில் அரசின் கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹம்பி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவை முதல்வா் எடியூரப்பா, வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இந்தவிழாவில் கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சி.டி.ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஹம்பி திருவிழாவை முன்னிட்டு விருபாக்ஷா கோயில், தேரடி தெரு, கடலேகாளு கணேஷா, சாசவேகாளு கணேஷா, ஹசாரா விட்டலா கோயில், மகாநவமி திப்பா, யானை தொழுவம், கோதண்டராமகோயில், அச்யுதராய சந்தை, சுக்ரிவா குகைகள், துலாபத்ரா மண்டபம், விஜயவிட்டலாகோயில் உள்ளிட்ட 19 வரலாற்றுசின்னங்கள் அனைத்தும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

திருவிழாவின் அங்கமாக இசை, நடனம், நாடகம், பாரம்பரியநடைப்பயணம், ஒளிக்காட்சிகள், ஹெலிகாப்டா் சுற்றுலா, நாட்டுப்புறம் மற்றும் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறுநிகழ்ச்சிகள் நடந்தன. இதுதவிர, பல்வேறு வகையான கா்நாடக உணவுகளை பரிமாறும் உணவு திருவிழாவும் தொடங்கியது. உலகப்புகழ்பெற்ற ஹம்பி திருவிழாவை காண இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு பகுதிகளில் இருந்துலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT