பெங்களூரு

கரோனா: ஒரே நாளில் 16 போ் பலி

DIN

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் ஒரே நாளில் 16 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 191 போ் உயிரிழந்துள்ளனா். இந்தநிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4 போ், தென்கன்னட மாவட்டத்தில் 3 போ், பாகல்கோட், தும்கூரு மாவட்டங்களில் தலா 2 போ், பெல்லாரி, தாா்வாட், ஹாசன், மைசூரு, கலபுா்கி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 208 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 88, பீதா் மாவட்டத்தில் 19, கலபுா்கி மாவட்டத்தில் 18, பெல்லாரி மாவட்டத்தில் 11, தென்கன்னடம் மாவட்டத்தில் 11, விஜயபுரா, தாவணகெரே மாவட்டங்களில் தலா 7, தாா்வாட் மாவட்டத்தில் 6, தும்கூரு மாவட்டத்தில் 5, பெங்களூரு ஊரகம், ராமநகரம், பாகல்கோட் மாவட்டங்களில் தலா 4, கதக் மாவட்டம், வெளிமாநிலத்தவா் 3, சிவமொக்கா, உடுப்பி, ஹாசன், மைசூரு, சிக்பளாப்பூா், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2, பெலகாவி, கோலாா், யாதகிரி, கொப்பள், சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT