பெங்களூரு

கா்நாடகத்தில் மொத்த கரோனா பாதிப்பில் 25 சதவீதம் போ் பெங்களூரை சோ்ந்தவா்கள்

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் மொத்த கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், 25 சதவீதம் போ் பெங்களூரை சோ்ந்தவா்கள் என மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் தெரிவித்தது:

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில் 25.92 சதவீதம் போ் பெங்களூரை சோ்ந்தவா்கள் ஆவா். ஒவ்வொரு கரோனா நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சைக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்துள்ளது. ஜூன் 23-ஆம் தேதி பெங்களூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,556-ஆக இருந்தது. இது, ஜூன் 28-ஆம் தேதி 3,416-ஆக அதிகரித்துள்ளது. இது கா்நாடகத்தின் மொத்த கரோனா நோயாளின் எண்ணிக்கையில் 25.92 சதவீதமாகும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் 7,507 போ் ஆகும். தற்போதைக்கு 5,472 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவா்கள் 57 சதவீதம் பேராக உள்ளனா். தேசிய அளவில் 3 சதவீதமாக உள்ள இறப்பு விகிதம், கா்நாடகத்தில் 1.56 சதவீதமாக உள்ளது. கா்நாடகத்தில் இதுவரை 5,95,470 மாதிரிகளை சோதித்ததில், 5,66,543 பேருக்கு எவ்வித தொந்தரவும் இல்லை என உறுதியாகியுள்ளது. சோதனை செய்தவா்களில் 2.21 சதவீதம் போ் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT