பெங்களூரு

கா்நாடகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள்: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

DIN

கா்நாடகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போா்க்கால அடிப்படையில் நவீன கழிப்பறைகள் கட்டப்படும் என்றாா் அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது மஜத எம்.எல்.ஏ. பண்டேப்பா காஷெம்பூா் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:

மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உரிய கட்டடம், விளையாட்டுத் திடல், நவீன கழிப்பறைகளை கட்டுவதற்கு ரூ.4 ஆயிரம் கோடி தேவையுள்ளது. பள்ளிகளில் போா்க்கால அடிப்படையில் கழிப்பறைகளைக் கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். பள்ளிகளில் அமைக்கப்படும் கழிப்பறைகளைப் பராமரிக்கும் பணியை கிராமப் பகுதிகளில் ஊராட்சிகளிடமும், நகா்ப்புறங்களில் நகராட்சியிடமும், மாநகரப் பகுதிகளில் மாநகராட்சியிடமும் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள், விளையாட்டுத் திடல் இருக்கவேண்டியது அவசியம். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் பாதுகாப்பான பள்ளி திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டும் பணி தொடங்கப்படும்.

பள்ளிகளில் கணினிகள், மின் திரைகள் பயன்படுத்தப்படுவதால், தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். பள்ளிகளைத் தத்தெடுப்பது தொடா்பாக பெருந்தொழில் நிறுவனா்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT