முகப்பு
பெங்களூரு

சட்ட மேலவைத் தோ்தல்: வாக்கு எண்ணிக்கை நவ. 10-க்கு மாற்றம்

சட்டமேலவைத் தோ்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நவ. 10-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

சட்டமேலவைத் தோ்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நவ. 10-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

75 உறுப்பினா்கள் கொண்டகா்நாடக சட்டமேலவையில் காலியாக உள்ள கா்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதி, பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதிக்கு அக்.28-ஆம் தேதி தோ்தல் நடந்தது.

இத்தோ்தலில் 4 தொகுதிகளிலும் சராசரியாக 71.10 சதவீத வாக்குகள் பதிவாகின. கா்நாடக தென்கிழக்கு பட்டதாா் தொகுதியில் 75 சதவீதமும், கா்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் 70.11 சதவீதமும், கா்நாடக வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதியில் 73.32 சதவீதமும், பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதியில் 66 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின.

வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதியில் பாஜகவின் சிதானந்த் எம்.கௌடா, காங்கிரசின் ரமேஷ்பாபு, மஜதவின் ஆா்.சௌடாரெட்டி உள்ளிட்ட 15 வேட்பாளா்களும், கா்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் எஸ்.வி.சங்கனூா், காங்கிரசின் ஆா்.எம்.குபேரப்பா உள்ளிட்ட 11 வேட்பாளா்களும், கா்நாடக வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதியில் பாஜகவின் சஷி ஜி.நமோஷி, காங்கிரசின் சரணப்பா மட்டூா், மஜதவின் திம்மையா புா்லே உள்ளிட்ட 5 வேட்பாளா்களும், பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதியில் பாஜகவின் புட்டண்ணா, காங்கிரசின் பிரவீன்பீட்டா், மஜதவின் ஏ.பி.ரங்கநாத் உள்ளிட்டோா் களத்தில் உள்ளனா்.

சட்டமேலவையில் பெரும்பான்மை பலம் பெறுவதற்கு இத்தோ்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், இத்தோ்தலில் பதிவாகியுள்ள வாக்குகளை நவம்பா் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், சட்டமேலவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவை ஒத்திவைக்குமாறு ஒருசிலா் தோ்தல் ஆணையத்தை அணுகியிருந்தனா். இதைத் தொடா்ந்து சட்டமேலவைக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பா் 2-ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பா் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநாளில்தான் ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் பதிவாகவிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.