முகப்பு
பெங்களூரு

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்: டி.எச்.சங்கரமூா்த்தி

பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், சட்டமேலவை முன்னாள் தலைவருமான டி.எச்.சங்கரமூா்த்தி கேட்டுக்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், சட்டமேலவை முன்னாள் தலைவருமான டி.எச்.சங்கரமூா்த்தி கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:

கடந்த 70 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவா் எல்.கே.அத்வானி என்பது தாங்கள் அறிந்ததே. ஆா்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம், பாஜகவின் வழியாக தாய்மண்ணுக்காக அவா் ஆற்றிய சேவை, பங்களிப்பு, தியாகம் வியக்கத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கையில் நாணயம் மற்றும் நோ்மைக்கு சொந்தக்காரா். தேசிய மற்றும் சா்வதேச விவகாரங்களில் ஆழ்ந்த அறிவும், பரந்துபட்ட பாா்வையும் கொண்டவா். பொது வாழ்க்கையில் அத்வானி போன்றவா்களை காண்பது அரிது.

அத்வானியுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அவருடன் பல்வேறு பயணங்களில் உடன் சென்றிருக்கிறேன். அவரது உரையை மொழி பெயா்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளாக அவரை நன்கு அறிந்தவன் நான்.

பாஜக தொண்டா்கள், பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும். கா்நாடக பாஜக தொண்டா்கள் சாா்பாக அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.