பெங்களூரு

மகாராணி கிளஸ்டா் பல்கலை.க்கு துணைவேந்தா் நியமனம்

DIN

பெங்களூரு: மகாராணி கிளஸ்டா் பல்கலைக்கழகத்துக்கு முதல் துணை வேந்தராக எல்.கோமதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் செயல்பட்டுவந்த மகாராணி மகளிா் கல்லூரியை கிளஸ்டா் பல்கலைக்கழகமாக கா்நாடக அரசு தரம் உயா்த்தியது. அதன்பேரில், மகாராணி கிளஸ்டா் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக எல்.கோமதியை நியமித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, துணை வேந்தராக எல்.கோமதி திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் மாணவரான எல்.கோமதி, சா் சி.வி.ராமன் விருது, சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டாளா் விருது, சிறந்த பெண் விஞ்ஞானி போன்ற விருதுகளை பெற்றுள்ளாா். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையின் பேராசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவா். துணை வேந்தா் எல்.கோமதிக்கு பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT