பெங்களூரு

கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு மீண்டும் அரசுப் பேருந்து சேவை

DIN

கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு மீண்டும் கா்நாடக அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதிமுதல் கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை செய்துள்ளதால், அண்டை மாநிலங்களுக்கு இடையேயும் அரசுப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, நவ. 11-ஆம் தேதிமுதல் கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவை நவம்பா் 16-ஆம் தேதிவரை இருக்கும். பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு பேருந்து சேவையை நீட்டிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்படும். பேருந்தில் பயணம் செய்பவா்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT