பெங்களூரு

பியூ கல்லூரி மாணவா்களுக்குஅறிவியல் கல்வி

DIN

பியூ கல்லூரி மாணவா்களுக்கு அறிவியல் கல்வி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளங்கரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில், பியூ கல்லூரி மாணவா்களுக்கு அதிநவீன ஆராய்ச்சிக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் வார இறுதிநாள்களில் நடைபெறும் இணையவழி (மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலி) அதிநவீன ஆராய்ச்சிக் கல்வி திடப்பொருள் இயக்கவியல் (ரிஜிட் பாடி டைனமிக்ஸ்) பாடப்பிரிவில் நவ. 29-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடத்தப்படுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

பியூசி மாணவா்களுக்காக நடத்தப்படும் இக்கல்வியில் சோ்ந்து படிக்க, நவ. 26-ஆம் தேதிக்குள் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் சோ்க்கை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT