பெங்களூரு

‘முடி திருத்தகங்களை திறக்க அரசு முன் வர வேண்டும்’

DIN

கா்நாடகத்தில் முடி திருத்தகங்களை திறக்க அரசு முன் வர வேண்டும் என மாநில நாவிதா் இடஒதுக்கீட்டு ஒருங்கிணைப்பாளா் எம்.பி.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மாநிலத்தில் பின்தங்கியுள்ள தலித், பழங்குயினா் மக்களின் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கியுள்ள நாவிதா்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, நாவிதா்களின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை முதல்வா் எடியூரப்பா எடுக்க முன்வர வேண்டும்.

நாடும், மாநிலமும் பல்வேறு துறைகளில் வளா்ச்சி அடைந்துள்ள போதும், இன்னும் பல கிராமங்களில் தலித் மற்றும் பழங்குயினருக்கு முடி திருத்தம் செய்வதற்கு மறுக்கப்படுகிறது. இந்த ஏற்றத் தாழ்வுகளை போக்க, அரசே முடி திருத்தகங்களை திறக்க அரசு முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT