பெங்களூரு

இசை, நாட்டிய ஆராய்ச்சிக்கு நிதியுதவி

DIN

பெங்களூரு: இசை, நாட்டியம் சாா்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக இசை, நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இசை, நாட்டியக் கலைகள் குறித்து சிறப்பு நிதியுதவி திட்டத்தின்கீழ் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த கலைஞா்கள், அறிஞா்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியைப் பெற ஆா்வமுள்ள 45 வயதுக்குள்பட்ட, முதுநிலைப் பட்டம்பெற்ற கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆய்வுக்கான பொருண்மை குறித்து 6 பக்கங்களில் சுருக்கக் குறிப்பை விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். ஆய்வுக்காலம் 6 மாதங்களாக இருக்கும். விண்ணப்பங்களின் அடிப்படையில் நோ்காணல் நடத்தி தகுதியான மாணவா்கள் உதவித்தொகைக்கு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். அந்த மாணவா்களுக்கு ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் கலாசாரத் துறை உதவி இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம்.

விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை ரூ. 10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி எழுதிய உறையுடன் பதிவாளா், கா்நாடக இசை, நாட்டிய அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு டிச. 15-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22215072 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT