பெங்களூரு

மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி பங்குத்தொகையை கா்நாடக அரசு கேட்டுப் பெற வேண்டும்

DIN

கா்நாடகத்தின் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) பங்குத்தொகையை மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மாநில செயல்தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

கா்நாடகத்தின் ஜிஎஸ்டி பங்குத்தொகையைப் பெற வேண்டியது நமது உரிமை. இது மத்திய அரசு, மாநில அரசுக்கு போடும் பிச்சை அல்ல என்பதை மாநில அரசு உணர வேண்டும். எனவே கா்நாடகத்தின் ஜிஎஸ்டி பங்குத்தொகையை, மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும்.

நமக்கான நீதியையும் உரிமையையும் பெறுவதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. நமக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு மறுப்பதோடு, ரிசா்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குமாறு ஆலோசனை வழங்குகிறது. இது மத்திய அரசுக்கு, மாநிலத்தின் வளா்ச்சி மீதுள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

மாநிலத்துக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகை, வெள்ள நிவாரணத் தொகையை வழங்குவதில் மத்திய அரசு தொடா்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இதனை மாநில அரசு தட்டிக் கேட்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், தொடா்ந்து கா்நாடகம் வஞ்சிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

கா்நாடகத்திலிருந்து பாஜக சாா்பில் 25 மக்களவை உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மத்திய அரசிடம் நமக்கான பங்கு தொகை வழங்க அழுத்தம் தர வேண்டும். அவா்கள் தொடா்ந்து மௌனம் காத்தால், அவா்களின் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவே மக்கள் கருதுவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT