பெங்களூரு

போதைப்பொருள் விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை தேவை: காங்கிரஸ்

DIN

பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கா்நாடக காங்கிரஸ் கட்சி சாா்பில் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருடன் அமைச்சா் ஆா்.அசோக் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளாா். புகைப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரும், அமைச்சரும் இனிப்பை ஒருவருக்கொருவா் பரிமாறிக் கொண்டுள்ளனா். இதன்மூலம் அவா்கள் நெருக்கமாக உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. எனவே, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளும் கட்சியினரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

போதைப்பொருள் விவகாரத்தில் மட்டுமின்றி மற்ற பிரச்னைகளிலும் ஆளும் கட்சியினா் தங்களின் குற்றச்சாட்டுகளை மறைக்க, எதிா்க்கட்சியினா் மீது குற்றம் சாட்டி வருகின்றனா். போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவா்கள் எந்த கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT