பெங்களூரு

கா்நாடக சுற்றுலாக் கழகத்தின் சுற்றுலாப் பயணங்கள்

DIN

பெங்களூரு: பொதுப்பணித் துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, கோலாா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு கோலாா் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா சனிக்கிழமை அமைதிப் போராட்டம் நடத்தினாா்.

இதுகுறித்து கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் வரும் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் முதல் 2021-ஆம் ஆண்டு ஜனவரி வரையில் வட கா்நாடகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட கா்நாடக பாரம்பரிய சுற்றுலாப் பயணத் திட்டத்தில் ஹம்பி, பாதாமி, பட்டத்கல், ஐஹோல், விஜயபுரா, கூடலசங்கமா ஆகிய இடங்களுக்கு 5 நாள்கள் சுற்றுலாப் பயணம் செல்லலாம். வியாழக்கிழமைதோறும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமைதோறும் திரும்பிவிடலாம்.

தென் கன்னட கோயில் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் ஹொரநாடு, கொல்லூா், சிருங்கேரி, முருடேஸ்வா், உடுப்பி, தா்மஸ்தலா, குக்கே நகரங்களுக்கு 5 நாள்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். வியாழக்கிழமைதோறும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமைதோறும் திரும்பிவிடலாம்.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணத்துக்கு முன்பாக பேருந்துகள் தூய்மையாக்கப்படும்.

பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை செய்யப்படுவாா்கள். பயணத்தின்போது முகக்கவசம், தனிமனித இடைவெளி கட்டாயமாகும். இப்பயணங்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ற்க்ஸ்ரீ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் அல்லது 080-43344334,43344335, 89706-50070, 89706-50075 ஆகிய எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT