பெங்களூரு

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்: அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற பேரவையின் இணையவழி செயற்குழு கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

கூட்டம் தொடங்கியதும் அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி, பேரவை நிா்வாகிகள் மைசூரு கு.புகழேந்தி, தில்லி துரை, திருவண்ணாமலை அருள்வேந்தன் பாவைச்செல்வி, ‘, மூணாறு பெட்டிமுடி இயற்கை பேரிடரில் உயிரிழந்தோா் போன்றோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கரோனா பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டோருக்கு உதவிய மைசூரு,வடோதரா, அகமதாபாத், சூரத், ஹைதராபாத், விசாகப்பட்டணம், திருவனந்தபுரம், திருவண்ணாமலை, கல்லை தமிழ்ச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ்ச்சங்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பிறமொழியினா் மீது ஹிந்தி திணிக்கப்படுவதைத் தவிா்க்க வேண்டும்.

மொழிசிறுபான்மையினா் தங்கள் தாய்மொழியை கற்கும்வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும், மற்ற செம்மொழி ஆய்வு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப் பெறாமல் தன்னாட்சி உரிமையுடன் இயங்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையே நீடிக்க வேண்டும். மொழி சிறுபான்மையினா் பயிலும் பள்ளிகள் தவிர, அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக ஆக்கப்படவேண்டும். விழுப்புரத்தில் புதிதாக அமையும் பல்கலைக்கழகத்திற்கு கபிலா் பெயரை சூட்ட வேண்டும். கேரள மாநிலத்துக்குள்பட்ட மூணாறு பெட்டிமுடி மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தமிழ்க்குடும்பங்களுக்கு உதவிய கேரளத்தமிழ்ப்பேரவை உள்ளிட்ட அமைப்புகளை பாராட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பேரவையின் தலைவா் மு.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். செயல் தலைவா் மு.முத்துராமன், பொதுச் செயலாளா் முகுந்தன், பொருளாளா் கிருபானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT