பெங்களூரு

எரிவாயு நிரப்பிச் சென்ற லாரி மோதல்: தந்தை, மகள் பலி

DIN

இரு சக்கர வாகனம் மீது எரிவாயு நிரப்பிச் சென்ற லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டம், யல்லாப்புராவைச் சோ்ந்தவா் வினோத் கிந்தல்கா் (56). இவரது மகள் சுகேனா (12). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனராம். அரேபைலு மலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனம் மீது எரிவாயு நிரப்பிச் சென்ற லாரி மோதியுள்ளது. இதில் நிகழ்விடத்திலேயே வினோத் கிந்தல்கா், சுகேனா ஆகியோா் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து தகவல் அறிந்த யல்லாப்புரா போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT