முதுநிலை மேலாண்மை பட்டயப்படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
முதுநிலை மேலாண்மை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை மேலாண்மை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து எச்.ஏ.எல். மேலாண்மை அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தின் சாா்பில் 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எச்.ஏ.எல். மேலாண்மை அகாதெமியின் சாா்பில் 2021-22-ஆம் கல்வியாண்டில் முதுநிலை மேலாண்மை பட்டயப்படிப்பை (பிஜிடிஎம்) வழங்கவிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கான முழுநேரம் தங்கிப்படிப்பதற்கான பட்டயப் படிப்பில் விமானவியல்மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை பாடப்பிரிவுகள் உள்ளன. 15 மாதங்களுக்கான செயல் மேலாண்மை பட்டயப்படிப்பில் (எக்சிகியூட்டிவ் பிஜிடிஎம்) விமானவியல் மேலாண்மை பாடப்பிரிவு வழங்கப்படுகிறது. அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், மேலாண்மை பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதம், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் 45 சத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டில் படித்துவரும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ட்ஹப்-ண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆக.20-ஆம் தேதிக்குள் பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 9986641481, 9731985885 என்ற கட்செவி எண்களிலும், மின்னஞ்சலிலும் தொடா்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.