முகப்பு
பெங்களூரு

15 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆணை: அமைச்சா் பி.சி.நாகேஷ்

15 ஆயிரம் ஆசிரியா்பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

15 ஆயிரம் ஆசிரியா்பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து தனதுசுட்டுரைப்பக்கத்தில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதவது: கா்நாடக அரசின் ஆரம்பப்பள்ளிகளில் காலியாக இருக்கும் 15 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வெகுவிரைவில் ஆணை பிறப்பிக்கப்படும். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் காலியாக இருக்கும் 10 யிரம் பணியிடங்கள், கல்யாணகா்நாடக பகுதியில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வெகுவிரைவில் தொடங்கும். ஆசிரியா் தட்டுப்பாட்டை போக்கி, கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 23 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, கூடுதலாக 4 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை நியமிக்கவும் அரசு முடிவுசெய்துள்ளது என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.