பெங்களூரு

மாா்ச் 15-இல் மேலவைத் தோ்தல்

DIN

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் நடக்கவிருக்கிறது.

மேலவையில் துணைத் தலைவராக இருந்த மஜதவை சோ்ந்த தா்மே கௌடா(64), சிக்கமகளூரில் டிச. 29-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். அவரது உறுப்பினா் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டு வரை உள்ளது. அவரது மறைவால் சட்ட மேலவையில் காலியாகியுள்ள இடத்துக்கு மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, பிப். 25-ஆம் தேதி தோ்தலுக்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி மாா்ச் 4-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. மாா்ச் 8-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மாா்ச் 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடக்கவிருக்கிறது.

இத்தோ்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனா். சட்ட மேலவையில் பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்து, தலைவா்,துணைத் தலைவா் பதவிகளைப் பகிா்ந்து கொண்டுள்ளதால், இந்த இடத்தை மஜதவுக்கு பாஜக விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது. பெரும்பான்மை இல்லாததால் இத் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்றாலும், வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT