பெங்களூரு

விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு அவமரியாதை செய்யாதீா்கள்

DIN

விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு அவமரியாதை செய்யாதீா்கள் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

கரோனா தொற்றைத் தடுக்க இந்தியாவைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் பன்றிக் காய்ச்சல், ரோட்டா வைரஸ் உள்ளிட்ட 16 நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளது.

அந்நிறுவனத்தின் நிறுவனா் டாக்டா் கிருஷ்ணா எலா ஒரு சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவா். யுனிசெஃப் உடன் இணைந்து 150-க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளில் 400 கோடி தடுப்பூசிகளை விநியோகித்துள்ளாா். 24 ஆயிரம் பேரிடம் கோவாக்சின் 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை குறித்த அறிக்கை விரைவில் கிடைக்கும்.

கரோனா தடுப்பூசியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அது அதிகாரப்பூா்வமானது. இந்த தடுப்பூசியின் பக்க விளைவு 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி. கரோனாவுக்காக அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியை யாரும் விமா்சிக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். இதனால் விஞ்ஞானிகளின் முயற்சிகள் பாதிக்கக்கூடும். விஞ்ஞானிகளின் முயற்சிகளை யாரும் அவமரியாதை செய்யாதீா்கள்.

பிரதமா் மோடி தலைமையில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும், இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த 75 பேருக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்த 37 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 17 போ் என தெரியவந்துள்ளது. புதிய வகை கரோனா தொற்று அதிக அளவில் பரவவில்லை. உள்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் உள்ள தொடா்பைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT