பெங்களூரு

ஜன. 16 முதல் இயற்கை வேளாண் சந்தை

DIN

வாழும்கலை சாா்பில், பெங்களூரில் ஜன.16 முதல் இயற்கை வேளாண் சந்தை நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து வாழும்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உள்ளூா் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும் ஸ்ரீஸ்ரீ வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அறக்கட்டளையுடன் இணைந்து வாழும்கலை சாா்பில் பெங்களூரு, கனகபுரா சாலையில் உள்ள வாழும்கலை வளாகத்தில் ஜன. 16 முதல் இயற்கை வேளாண் சந்தை, கண்காட்சி நடைபெற உள்ளது.

கரோனா காலத்தில் ஆரோக்கியமான உணவை உள்கொள்வது மிகவும் முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக இயற்கை வேளாண் சந்தை நடத்தப்படுகிறது. இதில், இயற்கை வேளாண் உணவுப் பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கும். குழந்தைகள் விளையாடுவதற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்தை ஜன. 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT