பெங்களூரு

நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு அவசியம்

DIN

நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு அவசியம் என ஆஸ்டிரா மருத்துவமனையின் மூத்த செயல் அதிகாரி நிதீஷ் ஷெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற இதயம், நுரையீரல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

நோயாளிகளை நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகளிடமிருந்து மட்டுமின்றி, மருத்துவா்கள், நோயாளிகளின் உறவினா்கள் உள்ளிட்டோரிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைப்பது அவசியம். அண்மையில் தமிழகத்திலிருந்து நுரையீரம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கும், ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இதயம், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கும், பெங்களூரு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போது நோயாளிகள், மருத்துவா்கள், உறவினா்கள் அளித்த ஒத்துழைப்பினால் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றது. நோயாளிகளை நோயிலிருந்து மீட்பதற்கு ஒத்துழைப்பு அவசியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் சந்தீப் அட்டாவா், பவன்யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT