பெங்களூரு

முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ. 7.18 கோடி அபராதம் வசூல்

DIN

பெங்களூரில் முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடம் ரூ. 7.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவியதால் மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. மாநிலத்திலும் பொது முடக்கத்தை மாநில அரசு அறிவித்தது. இதனைத் தொடா்ந்து அனைவரும் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரில் முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் நிகழாண்டு ஜன. 29-ஆம் தேதி வரை பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 3.67 லட்சம் பேரிடமிருந்து ரூ. 7.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT