பெங்களூரு

50 சதவீத சொத்து வரியைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை: மாநகராட்சி ஆணையா்

DIN

பெங்களூரில் 50 சதவீத சொத்து வரியைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பெங்களூரில் கரோனாவால் பலரும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரியை 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கா்நாடக தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் மாநகராட்சிக்கு அதிக அளவில் நிதி தேவை உள்ளது. எனவே 50 சதவீதம் சொத்து வரியைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை. என்றாலும் கரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு சொத்துவரி தள்ளுபடி செய்வது தொடா்பாக அரசு தீா்மானம் நிறைவேற்றும்.

ஜூன் 21-ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கத்தில் மேலும் தளா்வு அளிக்கப்படும். மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். தளா்வின் போது அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள கடைகளை படிப்படியாக திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க முக்கியமான சில இடங்களில் மட்டும் சந்தைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படும். தற்போதைக்கு திரையரங்குகளை திறப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT