பெங்களூரு

நுண்கலை ஆய்வுக்கு உதவித்தொகை

நுண்கலை சாா்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

DIN

நுண்கலை சாா்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடக லலித்கலா அகாதெமி சாா்பில் நுண்கலை சாா்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு ஆண்டுதோறும் ஆய்வு, சிறப்பு சாதனையாளா் ஆய்வுப் பிரிவுகளின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையைப் பெற நுண்கலை ஆய்வில் ஈடுபட விரும்பும் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர வகுப்பினரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நுண்கலையில் ஏதாவது ஒருபிரிவில் ஆய்வுப்பணிகளை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும். ஆய்வுப்பணி குறித்து 4-5 பக்கங்களில் குறிப்புடன் மாா்ச் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர வகுப்பினரில் தலா 10 போ்வீதம் மொத்தம் 30 பேருக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆய்வு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் தரப்படும். மேலும் விவரங்களுக்கு இணையதளம், 080-22480297 என்ற தொலைபேசி எண்ணையும் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT