பெங்களூரு

சிக்ஜாலா பஞ்சாயத்து தோ்தல்: மது விற்பனைக்கு தடை

DIN

சிக்ஜாலா பஞ்சாயத்து தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி புதன்கிழமை (மாா்ச் 31) எலஹங்காவின் சில பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மாா்ச் 31-ஆம் தேதி, சிக்ஜாலா பஞ்சாயத்துக்கான தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலைத் தொடா்ந்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனையொட்டி, எலஹங்கா அரசு ஆரம்பப்பள்ளி, பி.இ.ஓ அலுவலக வளாகம், என்.இ.எஸ்.பேருந்து நிறுத்தம் உள்ளிட்டப் பகுதிகளில் 2 கி.மீ. பரப்பளவிற்கு புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT