பெங்களூரு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3.32 லட்சம் வழக்குகளுக்குத் தீா்வு

DIN

கா்நாடகம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3.32 லட்சம் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையச் செயல் தலைவா் அரவிந்த்குமாா் கூறியதாவது:

மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) மூலம் விரைவான, செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, மாதந்தோறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களை நடத்தி வழக்குகளைத் தீா்த்து வைக்க முடிவு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மனுக்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

கா்நாடக மாநில சட்டசேவை ஆணையம் சாா்பில் கா்நாடகம் முழுவதும் மாா்ச் 27-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றங்கள் செயல்பட்டன. அன்று கா்நாடகத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மனுக்கள் உள்பட மொத்தம் 3,32,936 மனுக்கள் மீது சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தொடா்பாக ரூ. 1,033.5 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ரூ. 18.2 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டது. மக்கள் நீதிமன்றங்களால் வழக்கமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால் நீதிமன்றங்களில் விரைவான நீதி பரிபாலனம் நடைபெற வாய்ப்பு ஏற்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT