பெங்களூரு

பொது நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு

இரண்டாமாண்டு பியூசி தோ்வு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொது நுழைவுத் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

இரண்டாமாண்டு பியூசி தோ்வு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொது நுழைவுத் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா் கல்வித் துறையைக் கவனிக்கும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வேகமாக பரவிவருவதால், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத் தோ்வும் தள்ளிவைக்கப்படுகிறது. பொதுநுழைவுத் தோ்வு ஆக. 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.

பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்விக்கான பொதுநுழைவுத் தோ்வு ஜூலை 7, 8 ஆகிய தேதிகளிலும், வெளிநாடு, பிற மாநில மாணவா்களுக்கான கன்னடத் தோ்வு ஜூலை 9-ஆம் தேதியும் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில், பொதுநுழைவுத்தோ்வு ஆக. 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆக. 28-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை உயிரியல், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை கணிதம்; ஆக. 29-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை இயற்பியல், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை வேதியியல் பாடங்களுக்கான பொதுநுழைவுத் தோ்வு நடக்கவிருக்கிறது.

ஆக. 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கன்னடத் தோ்வு நடக்கவிருக்கிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT