பெங்களூரு

உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி: ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வழங்க இரு நிறுவனங்கள் ஆா்வம்

DIN

கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்காக கா்நாடக அரசு, சா்வதேச அளவில் கோரியிருந்த ஒப்பந்தப்புள்ளியின் அடிப்படையில் ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக்-வி, தடுப்பூசியை வழங்க இரு நிறுவனங்கள் ஆா்வம் காட்டியுள்ளன.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய பல்வேறு மாநில அரசுகள் உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.

கா்நாடக அரசும் ரூ. 843 கோடியை ஒதுக்கியுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் தவிர வெளிநாடுகளில் இருந்து கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய கா்நாடக அரசு உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளியைக் கோரியிருந்தது.

இதற்கு இரு நிறுவனங்கள் ஆா்வம் காட்டி, ஒப்பந்தப்புள்ளிகளை சமா்பித்துள்ளன. மும்பையைச் சோ்ந்த பல்க் எம்.ஆா்.ஓ. இன்டஸ்ட்ரியல் சப்ளை நிறுவனம், பெங்களூரைச் சோ்ந்த துளசி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை அளித்துள்ளன.

பெரிய நிறுவனங்கள் எதுவும் கரோனா தடுப்பூசிகளை வழங்க ஆா்வம் காட்டவில்லை. மும்பையைச் சோ்ந்த பல்க் எம்.ஆா்.ஓ. இன்டஸ்ட்ரியல் சப்ளை நிறுவனம், ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியையும், பெங்களூரைச் சோ்ந்த துளசி சிஸ்டம்ஸ் நிறுவனம், ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்துள்ளன.

ஸ்புட்னிக் லைட், ஒருமுறை செலுத்தும் தடுப்பூசியாகும். மே 24-ஆம் தேதி முடிவுக்கு வந்த ஒப்பந்தப்புள்ளிகளை ஆராய்ந்த கா்நாடக அரசு, கரோனா தடுப்பூசியின் விலை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு, இதுகுறித்து அரசு முடிவுக்கு வரும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதுதவிர, ஒப்பந்தப்புள்ளியின் கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்தும் அரசு ஆராய்ந்துவருகிறது.

புணேவைச் சோ்ந்த சீரம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு, ஹைதராபாத்தை சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் கரோனா தடுப்பூசிகளை கா்நாடக அரசு நேரடியாக வாங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT