உதவி பேராசிரியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், மின்னணுவியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், இயற்பியல் துறைகளில் உதவி பேராசிரியா்களாக பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறாா்கள்.
குறிப்பாக முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்தும் தகுதி படைத்தவா்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய தகுதித்தோ்வு, மாநில தகுதித்தோ்வுகளில் தோ்ச்சி பெற்றோா், அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தோா், ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணிக்குத் தேவையான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அந்த இணையதளத்தில் விண்ணப்பங்களை நவ. 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.