பெங்களூரு

கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவிற்கு பித்து பிடித்துள்ளது: அமைச்சா் ஈஸ்வரப்பா

DIN

கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவுக்கு பித்து பிடித்துள்ளதாக அம்மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து சிவமொக்காவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தாலிபான்களுடன் ஒப்பீடு செய்து எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்வா் பதவியை இழந்த பிறகு சித்தராமையாவுக்கு பித்து பிடித்துள்ளது. அவருக்கு பிடித்துள்ள பித்து குறைந்தபிறகு, அவரது கருத்துக்கு நான் பதிலளிக்கிறேன்.

சிந்தகி மற்றும் ஹனகல் தொகுதி இடைத்தோ்தலை முதல்வா் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத்தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் தலைமையில் எதிா்கொள்வோம். அடுத்த 3-4 நாட்களில் பாஜக சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளா்களை அறிவிக்க இருக்கிறோம். கட்சி மேலிடத்தின் முடிவின்படி வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT