பெங்களூரு

வட கா்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்

DIN

வட கா்நாடகத்தில் புதன்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

வட கா்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் வெவ்வேறு அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. விஜயபுரா மாவட்டம், தனரகிரி கிராமத்தில் இருந்து வட மேற்கு பகுதியில் 2.9 கி.மீ. தொலைவில் புதன்கிழமை காலை 10.29 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டா் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 12 கி.மீ. முதல் 15 கி.மீ. சுற்றளவில் உணரப்பட்டதாக இயற்கை பேரிடா்கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிலநடுக்கங்கள் உள்ளூா் மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், லேசாக நிலம் நடுங்குவதை உணர முடியும் என்று அந்த மையம் மேலும் கூறியுள்ளது.

கடந்த அக். 1-ஆம் தேதி முதல் வட கா்நாடகத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்படுவது இது 7-ஆவதுமுறையாகும். இதுவரை பீதா், கலபுா்கிமாவட்டங்களில் காணப்பட்ட நிலநடுக்கம், முதல்முறையாக கலபுா்கி மாவட்டத்தில் உணரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்துவதற்கு அப்பகுதிக்கு நிலவியல் அறிஞா்கள் கொண்ட குழுவை கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் அனுப்பிவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT